சிவப்பு ரத்தத்தின் வெள்ளைச் சீழ்
ஓடத்தான்
செய்யும்
உடலுக்குள்
ஓடிக் கொண்டிருக்கும்
ரத்தமும்
சிறு
காயமோ பெரும் காயமோ
வெளிப்பாய்ந்து
விட்ட
ரத்தமும்
சீழாக
வடியும்
மருந்தைத்
தின்று
உடலெல்லாம்
திரியும்
சிவப்பு
ரத்தத்தில்
இன்னும்
வெள்ளை அணுக்கள்
வேண்டும்
என்று குழப்பும்
சீழாக
வடிவது என்ன
கருப்பு
அணுக்கள் என்றா
எதிர்
கேள்வி கேட்க முடியும்
அதுவாக
நிற்கட்டும்
மெதுவாகப்
போ
அதுவாக
ஓடட்டும்
மெதுவாக
இரு
*****
சுட்டுப் போடு
நவீனப்
பாட்டி
நான்கு
கவிதைச் சுட்டுப் போட்டாள்
காக்கா
கொத்திச் சென்றதை
நரி
கவ்வப் பார்த்தது
கவிஞர்
என்று வந்தவர்
சுட்டதையே
திரைப்பாட்டில்
சுட்டுப்
போட்டார்
*****
No comments:
Post a Comment