கடைசி விற்பனைக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது
சிறுநீரகத்தைத்
திருடி விற்றதாக
பிரமாண்ட
மருத்துவமனையைக் கைகாட்டினாள்
இதயத்தைத்
திருடிப் புசித்ததாக
கையில்
பணத்தோடு பையில் பாலியல் வேட்கையோடு வரும்
ஆண்மை
கொண்ட பொலிகளைச் சுட்டினாள்
கண்களைச்
சுரண்டி எடுத்ததாக
கந்து
வட்டிக்காரனை அடையாளம் காட்ட முடியாமல் தவித்தாள்
கால்களை
உடைத்து கைகளில் பாத்திரம் திணித்து
அலைய
விடும் கூட்டத்தை
அனுமானிக்க
முடியவில்லை என்றாள்
அவரவர்
எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்ட பின்
அனாதைப்
பிணமென எறிந்து விடுவரோ என
குலுங்கிக்
குலுங்கி அழுதாள்
மூளைச்
சாவடையச் செய்து
இன்னும்
உறுப்புகளை உருவ வாய்ப்பிருக்கிறது என்பதை
அறியாத
பேரிளம் பெண்ணாகி விட்ட பேதைப் பருவத்தாள்
*****
No comments:
Post a Comment