1 Dec 2018

பேச்சுத் தமிழின் செளகரியங்கள்


நம் மனதைத் தவிர நம்மை யாரும் குழப்ப முடியாது.
*****
            ரொம்ப எளிமையானது வாழ்க்கை. கஷ்டப்பட்டுதான் இதைப் புரிந்து கொள்ளும் மனசு. அப்புறம் வாழ்க்கை எப்படி எளிமையாகத் தெரியும்? கஷ்ட கஷ்டங்கள்!
*****
கவிதைகள்தான் எழுத வேண்டுமா என்ன?
தேர்ந்த உரைநடையில்தான் எழுத வேண்டுமா என்ன?
பேச்சுத் தமிழ் போதாதா?
பேசிய பின்தானே எழுதத் துவங்கியிருப்பார்கள்.
 பேச்சும், எழுத்தும் ஒரே மாதிரியாக அமைந்து விடும்.
எந்தக் குழப்பமும் இருக்காது.
பேச்சுத் தமிழின் செளகரியங்கள்.
*****
நல்ல இலக்கியம், கெட்ட இலக்கியம் என்பதெல்லாம் பம்மாத்து. அது இருக்கின்ற நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கி விடும். அது இதை இப்படி எழுத வேண்டும், அப்படி எழுத வேண்டும் என்று ஏகப்பட்ட வரையறைகளை வைத்து இருப்பதாக சிலாகிக்கப்படும். அதில் சில இலக்கணம் கற்ற புலவர்களின் இடைஞ்சல்கள் இருக்கிறதே! தாங்க முடியாதது! 
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...