காமெடி கீமெடி
இடுக்கண் வருங்கால்
நகுக என்கிறார் வள்ளுவர்.
துன்பம் வரும்
வேளையில் சிரிங்க என்று வள்ளுவரும் சொல்லி வைத்தார் சரிங்க என்று இதை கண்ணதாசனும்
பாடல் படுத்தியிருக்கிறார்.
கஜா புயலின்
கோர தாண்டவத்தை அவ்வாறு எடுத்துக் கொண்டு சிரிக்க முடியாது என்பதால் அந்தக் குறையைப்
போக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும் போது சிரிக்காமல்
இருக்க முடிவது கடினமாக இருக்கிறது.
மின்கம்பங்கள்
நடும் பணியைப் பார்வையிட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் மிக வேகமாக விமானங்களைப் பயன்படுத்தி
மின்கம்பங்களை நடுமாறு கூறியிருக்கிறார்.
புயல் சேதங்களைப்
பார்வையிட்ட மதிப்பீட்டுக் குழுவில் இருந்த ஒருவர் விழுந்து கிடந்த தேங்காய்களைப் பார்த்து
தென்னை மரத்தின் முட்டைகள் என்று கூறியிருக்கிறார்.
புயலால் மக்கள்
அடைந்த துன்பங்களையும், துயரங்களையும் மறக்கடிக்க இவர்கள் இப்படி காமெடி செய்கிறார்கள்
என்று இவைகளை எடுத்துக் கொள்வதா? அல்லது மக்களை வைத்து இவர்கள் காமெடி கீமெடி செய்கிறார்கள்
என்று எடுத்துக் கொள்வதா? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.
*****
No comments:
Post a Comment