5 Jul 2018

உதவி பெறுவதற்கானத் தகுதி

உதவி பெறுவதற்கானத் தகுதி
ஆசை கொண்டு கேட்கும் உதவிகள்
அசிங்கப்படுத்தி விட்டுப் போகின்றன
தேவைப்படும் உதவிகள்
தேவையான நேரத்தில் கிடைக்காமல் போகின்றன
எதிர்பார்க்கும் உதவிகள்
ஏமாற்றத்தில் நிறுத்தி விட்டுப் போகின்றன
தானாகக் கிடைக்கும் உதவிகள்
சிபாரிசுகள் தேவைப்படாமல் நிறைவேறுகின்றன
உதவிகள் கிடைத்தால்
பெரிய ஆளாக ஆகலாம்
ஆனால் பெரிய ஆளாக ஆக
உதவிகள் கிடைக்கும் வரை காத்திருக்கக் கூடாது
பெரிய ஆளாக ஆனால்
உதவிகள் செய்யலாம்
ஆனால் செய்வதாக் சொல்லிச் செய்யக் கூடாது
செய்வது உதவி என்பது புரியாமலேயே
கைம்மாறு என்பதாகக் கருதிப்
பெரிய ஆட்களுக்கு உதவிகள் செய்ய
சிறிய ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்
கேட்பது உதவி என்பது தெரியாமல்
கேட்பதில் இருக்கிறது சாமர்த்தியம்
உங்களுக்கு உதவி செய்தால் உயரலாம்
என்ற பிம்பத்தைக் கட்டமைப்பில் இருக்கிறது
உதவி பெறுவதற்கான உங்களது தகுதி
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...