5 Jul 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 7


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 7
            மாணவர்களுக்கானப் புத்தக இயக்கமான செங்காந்தளின் ஏழாவது அறிவுத் திருவிழா 20. 06. 2018 - புதன் அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், ஊட்டியாணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
            தொலைதூரக் கிராமமான ஊட்டியாணியில் நடைபெற்ற அறிவுத் திருவிழா மாணவர்களின் எண்ணத்தைக் கவர்ந்தது.
            அறிவுத்திருவிழாவின் ஒரு பகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஒரு வார காலத்துக்கு வாசித்து ருசிக்கவும் மாணவர்கள் விரும்பினர். ஒரு வார காலம் புத்தகங்கள் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விரும்பிய புத்தகங்களையெல்லாம் மாணவர்கள் வாசித்துத் தீர்த்தனர். அத்துடன் பெற்றோர்கள் மற்றும் கிராமத்து மக்களும்.
            ஏழாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவில் மாணவர்கள் 18 புத்தகங்களை தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர்.
            இத்துடன் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆசிரியர் பெருமக்களும், நண்பர்களும் பரிசளிப்புக்காகவும், வாசிப்பிற்காகவும் 224 புத்தகங்களைச் செங்காந்தள் மூலம் வாங்கிக் குவித்தனர்.
            ஆக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வாங்கிய 18 நூல்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களும், நண்பர்களும் வாங்கிய 224 நூல்கள் இவ்விரண்டையும் சேர்த்து 242 நூல்களைப் பிஞ்சு கரங்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறோம்.
            அறிவுத் திருவிழாவின் இலக்கான ஒரு லட்சம் புத்தங்கள் என்ற குறிக்கோளில் நாம் மாணவர்களின் கரங்களில் சேர்க்க வேண்டிய 97,928 என்ற இலக்கிலிருந்து 242 நூல்களைக் கழித்தால் இன்னும் 97,686 நூல்களை நாம் மாணவர்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்.
            கரங்கள் கோர்ப்போம்! வாசிப்புத் தாகம் தீர்ப்போம்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...