12 Jul 2018

அளத்தலின் தந்திரங்கள்

அளத்தலின் தந்திரங்கள்
எம் மகவை அளக்க முடியாது என்று நினைத்திருந்தேன்
அவர்கள் அளந்து எடை இவ்வளவு என்று சொன்னார்கள்
உயரம் இவ்வளவு என்று சொன்னார்கள்
இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு இவ்வளவு என்று சொன்னார்கள்
அறிவை அளக்க முடியாது என்று நினைத்திருந்தேன்
அவர்கள் அளந்து மதிப்பெண் இவ்வளவு என்று சொன்னார்கள்
வாழ்வை அளக்க முடியாது என்று நினைத்திருந்தேன்
அவர்கள் அளந்து ஊதியம் இவ்வளவு என்று சொன்னார்கள்
ஆயுளை அளக்க முடியாது என்று நினைத்திருந்தேன்
அவர்கள் அளந்து ஆண்டுகள் இவ்வளவு என்று சொன்னார்கள்
எவைகள் எல்லாம் அளக்க முடியாதோ
அவைகளையெல்லாம் அளந்து சொன்னார்கள்
எம் மகவுக்கு ஒரு நாளில் கிடைக்க வேண்டிய உணவை
எம் மகவு ஒரு நாளில் குடிக்க வேண்டிய நீரை
எம் மகவு வசிப்பதற்கான குறைந்த பட்ச இடத்தை
அவர்கள் அளந்து கடைசி வரை சொல்லவில்லை
கிடைத்தால் தின்று கொள், குடித்துக் கொள்,
இடம் இருந்தால் இருந்து கொள்
இல்லை இறந்து கொள்
மந்திரம் சொல்வதைப் போல
உதிர்த்து விட்டு அவர்கள் சென்று விட்டார்கள்
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...