11 Jul 2018

விஷ்ணுபுரம்


எனக்கு செல்போன் கேம்ஸ் எதுவுமே விளையாடத் தெரியாது. எம் பொண்ணுக்கு சில்லுகோடு, நொண்டிகோடு, கண்ணாமூச்சி, ஓடி பிடிச்சு விளையாடறது எதுவும் விளையாடத் தெரியாது.
*****
விஷ்ணுபுரம் படிக்க வேண்டும் என்று ஆசை. பாதிலேயே நின்று விடுகிறது.
*****
சச்சினுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் அவர் ரிட்டையர் ஆகி விட்டாராம். நானும்தான் ரிட்டையர் ஆகி விட்டேன்.
*****
தான் டி.வி.யில நியூஸ் பார்க்குறீங்களே. அப்புறம் எதுக்கு நியூஸ் பேப்பர். மாசத்துல முக்காவாசி நாள்ல ஹோட்டல்லதான் பார்சல் வாங்கிட்டு வரச் சொல்றே, அப்புறம் எதுக்கு மாசம் பொறந்தா மளிகை லிஸ்ட்ன்னு கேட்க முடியாது. பொருமிக் கொள்வதோடு நிப்பாட்டிக் கொள்ள வேண்டும்.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...