சித்தப்பாவின் வார்த்தைகள்
எந்த
நல்லது நிகழும் போதும்
ஒரு
கெட்ட வார்த்தை சொல்லி சிலாகிப்பார்
சித்தப்பா.
தன்
வாழ்வின் எல்லா நல்லதுகளையும்
பரிகாசம்
செய்வார்
கெட்டதுகள்
அத்தனையையும்
கண்டு
கொள்ளாமல் விட்டு விடுவார்
நள்ளிரவில்
உறக்கத்தில் உயிர் பிரிந்த
சித்தப்பாவின்
துக்கத்தில்
அவரைப்
போல
அவரது
மரணத்தை
ஒவ்வொருவரும்
சிலாகித்துக்
கொண்டிருந்தனர்
"
---------------
------------------
செத்தா
இப்படிச் சாகணும்டா!"
*****
No comments:
Post a Comment