20 Nov 2017

ஆதார அரசியல்

ஆதார அரசியல்
என் வீட்டு ஜன்னலிலிருந்து
தெரிவதெல்லாம் சுவர்கள்தான்
என்றதற்கு
ஏ.சி. வைத்த என் வீட்டில்
ஜன்னல்களே தெரியவில்லை
என்றார்
கூலிங் கிளாஸ் அணிந்த
பக்கத்து வீட்டுக்காரர்.
பறவைகள், குருவிகள்,
ஆடுகள், மாடுகள்
பார்ப்பதுண்டா என்றதற்கு
என் வீட்டு நாயன்றி
எதுவும் பார்த்ததில்லை என்றார்.
ஏரியா கெளன்சிலர்,
எம்.எல்.ஏ,. எம்.பி.,
யாரையேனும் அறிந்ததுண்டா
என்றதற்கு
ஓட்டுக்குப் பணம் வாங்கியதன்றி
அரசியல் தெரியாது என்றார்.
"இந்த தேசம் எப்படி உருப்படும்?"
என்று மூச்சுக்கு முந்நூறு முறை
அடிக்கடி கூறும் அவர் அதற்கு ஆதாரமாக
தன் வீட்டுக்கு முன் இருக்கும்
சாலைப் பள்ளம் குறித்து
பார்க்கும் போதெல்லாம் பேசினார்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...