7 Oct 2017

காத்திருப்பு

காத்திருப்பு
ம்மா இருந்து சோறிட்ட
அத்தனை இரவுகளையும்
அலட்சியப்படுத்தியவன்
இரவு உணவு விடுதியொன்றில்
ஆர்டர் செய்த தோசைக்காக
பதினெட்டு நிமிடங்களாகக்
காத்திருக்கிறான்
குடலைப் பொத்தலிடும் பசியைப்
பொறுத்துக் கொண்டு
மயங்கிச் செருகும் கண்களை
தூக்கி நிறுத்தியபடி.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...