ராஜாவின் கவலைகள்
ராஜாவுக்கு
ஆயிரம் கவலைகள்
அனுப்பிய பணம்
ஸ்விஸ் பேங்குக்குச்
சேர்ந்திருக்குமா
என்பது தொடங்கி
வரும் வருஷத்திலும்
இதே போல
வரும்படி தேறுமா
என்பது வரை.
அவர் தன் பிரதானக்
கவலையை
பிரகடனப்படுத்திக்
கொண்டிருந்தார்,
"இந்த
நாட்டின் வளர்ச்சி குறித்து
அதிகம் கவலைப்படுகிறேன்!"
அவர் சொல்லும்
கவலை
அவர் மட்டுமே
அறிந்தது
என்பது
அவருக்கு மட்டுமே
தெரியும்.
அவர் கவலையில்
நியாயம்
இருப்பதாக
நாம்
அநியாயத்துக்கு
பேசித் திரிவோம்
என்பதை
அவர் மனம்
நன்றாக அறியும்.
என்ன செய்வது
நாம் ஜனநாயக
நாட்டில்
பிறந்து விட்டோம்
சகித்துக்
கொள்ளத்தான் வேண்டும்
தெரிந்தாலும்,
தெரியாவிட்டாலும்.
*****
No comments:
Post a Comment