இப்படித்தான் துவங்கியது போராட்டம்
நம்மைப் பற்றி
நாம் எதுவும் சொல்லி விடக் கூடாது
உடனே மட்டம்
தட்டுவார்கள்
அவர்கள் தங்களைப்
பெரிதினும் பெரிதாய்
வியந்து கொள்வார்கள்
அதை நாம் தடை
செய்து விடக் கூடாது
உரையாடலைச்
சமத்துவமாக நிகழ்த்த விரும்பாத
அவர்களிடம்
எப்படி உரையாடுவது?
பிரச்சனைகளைப்
பேசித் தீர்க்கலாம் என்பவர்களிடம்
நாங்கள் சொல்லிக்
கொள்வதெல்லாம்
எங்கள் போராட்டம்
இப்படித்தான் துவங்கியது என்பதைத்தான்.
*****
No comments:
Post a Comment