4 Oct 2017

எல்லா தீர்வுகளும் ஒரே மாதிரித் தீர்வு அல்ல!

எல்லா தீர்வுகளும் ஒரே மாதிரித் தீர்வு அல்ல!
            சில பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் விட்டு விடுவதுதான். பெரும்பாலான மனவியல் பிரச்சனைகளுக்கு இத்தீர்வு சிறந்த தீர்வாக அமையும். ஆனால் மனதால் அப்படி இருக்க முடியாது. அதற்குக் காரணம் மனதின் தன்முனைப்புதான்.
            தன்முனைப்புக்குப் பிரச்சனைகளைத் தீர்த்துதான் பழக்கம். தன்முனைப்பால் பிரச்சனைகளைத் தீர்க்காமல் இருக்க முடியாது.
            மனவியல் பிரச்சனைகளில் சில தீர்க்கத் தீர்க்க அல்லது தீர்வு சொல்லச் சொல்ல பெரிதாகிப் போய்க் கொண்டே இருக்கும். தன்முனைப்பு மென்மேலும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விளம்பிக் கொண்டே இருக்கும். பிரச்சனை மென்மேலும் சிக்கலாகிக் கொண்டு இருக்கும். தன்முனைப்பை விட்டு விட்டால் எரிகிற கொள்ளியை இழுத்து விட்டால் அணைந்து விடும் நெருப்பு போல் பிரச்சனையும் அணைந்து விடும்.
            இரண்டு தன்முனைப்புகள் ஒரு போதும் இயைந்து போகாது. ஒத்தத் துருவங்கள் விலக்கிக் கொள்வதைப் போன்றவைகள் அவைகள். இரண்டு தன்முனைப்புகள் மத்தியில் தீர்வுகள் ஏற்பட முடியாது. தன்முனைப்புகள் மோதிக் கொள்வதை விரும்புமே தவிர ஒன்றிணைய விரும்பாது. இரண்டு மனிதர்கள் இப்படித்தான் அபிப்ராய‍ பேதம் கொண்டு சிக்கலைத் தொடங்கி வைக்கிறார்கள்.
            இது போன்ற பிரச்சனைகளைப் பொருத்த வரை தன்முனைப்பு உதிரும் வரை காத்திருப்பதுதான் வழி. தன்முனைப்பு உதிர்ந்தால் பிரச்சனைகளும் உதிர்ந்து விடும். தன்முனைப்பால் உருவாகும் பிரச்சனையைத் தீர்ப்பது என்பது இல்லாதப் பிரச்சனையைத் தீர்ப்பது போலத்தான்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...