உன்னை எண்ணில் தேடுகிறேன்
ஒரு பத்து
இலக்க எண்ணின் அமைப்பில்
நீ இந்த செல்பேசியில்
பதிவாகியிருக்கிறாய்
அது அழிந்து
விடும் போது
உன்னைத் தேட
வேண்டியதாக இருக்கிறது
பத்து எண்களைப்
பலவாறாகக்
கலைத்துப்
போட்டு
பலவிதமாக தேடியும்
நீ அகப்பட
மறுக்கிறாய்.
எதேச்சையாய்ச்
சந்தித்த
தேநீர்க் கடையொன்றின்
சந்திப்பில்
உன் எண்ணை
நீ மீண்டும் தர
செல்பேசியோடு
சேர்த்து
நாட்குறிப்பின்
ஓர் ஓரத்திலும்
பதிந்துக்
கொள்கிறேன் அந்த எண்ணை.
இனி நீ தொலைந்துப்
போக மாட்டாய்
உன் எண்ணுக்கு
அழைக்கும் அவசியம்
எனக்கு ஏற்படுமோ
என்னவோ?
*****
No comments:
Post a Comment