கலகக்காரனின் வாக்குமூலம்
அவர்களுடைய
சடங்குகள் சம்பிரதாயங்கள்
என்னைத் தொந்தரவு
செய்கின்றன
என் சுதந்திரத்தைத்
தடை செய்கின்றன
என் இருப்பை
அசிங்கப்படுத்துகின்றன
அவர்களின்
சுயநலமும் சுயலாபமும்
அதில் ஒளிந்திருக்கின்றன
அவர்களால்
விட்டுத் தர முடியாத அவைகளை
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாது
என்னைப் பார்க்கும்
இடங்களில் எல்லாம்
அவர்கள் என்னைக்
கலகக்காரன் என்பார்கள்
அவர்களின்
எதிரி என்றும் பரிகசிப்பார்கள்
எனக்குத் தெரியும்
அவர்கள் எனக்கு எதிரியல்ல
அவர்களுக்குள்
இருக்கும் மனிதன்
எனக்கு நன்கு
தெரிந்தவன்
அவனை வெளிக்கொணரவே
இந்தக் கலகக்குரல்
என்பதை
அவர்கள் கூடிய
விரைவில் புரிந்து கொள்வார்கள்.
*****
No comments:
Post a Comment