பணம்! பணம்!
"நாலாந் தெருவுக்கு வந்தீன்னா பணம்
கிடைச்சிடும்!" ஏழு இடங்களில் ஏறி இறங்கி எட்டாவது ஏ.டி.எம்.மில் பணம் கிடைத்த
மகிழ்ச்சியில் பரமு பாண்டிக்கு செல்பேசினான்.
*****
வாட்ஸ் அப் பிரியாணி
"நேத்தி பிரியாணி சூப்பர்!"
என்று கலா சொன்னதும், "நேத்தி அவங்க எப்ப பிரியாணி சாப்பிட்டாங்க?" என்று
கேட்ட கணவனுக்கு சிரித்துக் கொண்டே சொன்னாள் பர்வீன், "வாட்ஸ் அப்ல பார்த்திருப்பாங்க!"
*****
ஆ!
பசுக் காவலன் பரந்தாமன் பயணம் செய்த டைம்
மிஷின் பசுக்களைப் பலியிடும் வேத கால அசுவமேத யாகசாலையில் போய் நின்றது.
*****
No comments:
Post a Comment