கிறுகிறு டிஜிட்டல் மணி
உங்கள் பகுதியில் நெட் பேக்கின் டேட்டா
உறிஞ்சல் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது இந்த
டேட்டா உறிஞ்சல்கள். சில நேரங்களில் மனசாட்சியே இல்லாமல் போட்ட அத்தனை எம்.பி.க்களையும்
சில நிமிட நேரங்களில் உறிஞ்சித் தள்ளி விடுகிறது.
சில நேரங்களில் இழுவோ இழுவோ என்று சுற்றிக்
கொண்டே இருக்கிறது. டேட்டோ உறிஞ்சலில் எல்லா பகுதிக்கும் ஏற்ற சமத்துவம் இல்லையோ
என்று எண்ணத் தோன்றுகிறது.
டேட்டாவை வேகமாக இழுப்பதற்கும், மெதுவாக
இழுப்பதற்கும் பயன்படுத்துவர் என்ன செய்ய முடியும்?அது அவர்களின் கைகளில் இல்லை. சேவை
வழங்கும் நிறுவனத்தின் கைகளில் இருக்கிறது.
டேட்டா பயன்பாட்டில் டென்ஷனானவர்கள் ஏராளம்.
உடைந்த செல்பேசிகள் மற்றும் மோடம்கள் கணிசம் தேறும்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
என்பது போல, உங்கள் பகுதியில் நல்ல டேட்டா வழங்கும் சேவையுள்ள நிறுவனத்தில் நீங்கள்
இருப்பது முன்ஜென்மத்தில் வாங்கி வந்த வரம்.
டேட்டா ஸ்பீடு போதவில்லை என்று நான்கு
விதமான நெட் மோடம் வாங்கி வைத்திருக்கும் நகரத்தார்கள்(நகரவாசிகள்- மெயின் டவுனில்
வசிப்பவர்கள்) நால்வரையாவது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நிலைமை இப்படி இருக்கையில்... டிஜிட்டல்
மணி என்பதை நினைத்துப் பார்க்கும் போது தலை கிறுகிறு என்று இருக்கிறது.
*****
No comments:
Post a Comment