டோன்ட் மிஸ் இட்!
இன்றைய நடைபயிற்சியை தவற விடக் கூடாது
என்று முனைப்பில் மெரினாவை நோக்கிக் காரில் விரைந்து கொண்டிருந்தார் பழனிச்சாமி.
*****
அலாரம்
மாலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும்
என்று அலாரம் வைத்துக் கொண்டு படுத்தான் நைட் ஷிப்ட் முடித்து வந்த சபரீசன்.
*****
தொழில் நுணுக்கம்
"காய்ச்சல், தலைவலி, வயித்து வலின்னு
வந்தா, நாலைஞ்சு மாத்திரைங்க கொடுத்தாத்தான் ஏதாவது ஒண்ணுல குணமாகும். நம்ம கடையைத்
தேடி மறுபடியும் வருவாங்க!" புதிதாகச் சேர்ந்த பையனிடம் தொழில் நுணுக்கத்தைச்
சொல்லிக் கொண்டு இருந்தார் மெடிக்கல் கடை ஓனர் மதியழகன்.
*****
No comments:
Post a Comment