நேர்காணல்
நேர்காணலுக்கு வந்த வேட்பாளரிடம் முதல்
கேள்வியாகக் கே்டடார் தலைவர், "ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்க முடியும் உங்களால?"
*****
ஞாபகம்
தான் பேசுவது லேண்ட் லைன் என்ற ஞாபகம்
இல்லாமல், வழக்கம் போல் "வெளியில இருக்கேன் சார்!" என்றான் ராகவன்.
*****
பந்தோபஸ்து
"முன்ன மாதிரி இல்ல, சின்ன அசம்பாவிதம்னா
கூட போலீஸ் பந்தோபஸ்தை அதிகரிச்சிடுறாங்க தெரியுமா!" டாஸ்மாக் முன் குவிக்கப்பட்டிருந்த
போலீஸ் பெட்டாலியனைப் பார்த்து பெருமையோடு பேசிக் கொண்டிருந்தான் சங்கர்.
*****
No comments:
Post a Comment