19 Aug 2017

என்னென்ன செய்கிறது எண்ணெய்!

என்னென்ன செய்கிறது எண்ணெய்!
            முதலில் கையில் பொத்துக் கொண்டு வடிந்தது. சதைப் பகுதியில் வந்ததால் அது ஆறி விட்டது. காலில் எலும்புப் பகுதிக்கு அருகில் வந்து பொத்துக் கொண்டு வடிந்த சீழ் கடுமையான வேதனையைத் தந்து விட்டது. அந்த நிலையோடு அதிகம் நடந்திருக்கக் கூடாது. சூழ்நிலை... நடக்க வேண்டிய, நிற்க வேண்டிய நிலையில் கொண்டு போய் விட்டு விட்டது. தவிர்க்க முடியவில்லை. கால் வந்து வீங்கிக் கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டது. கவுட்டியிலும் புண். எரிச்சல் என்றால் தாங்க முடியாத எரிச்சல். தண்ணீரை ஊற்றினால் பற்றிக் கொண்டு எரிவது போல ஒரு எரிச்சல். அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றிக் கழுவக் கூட முடியவில்லை. ஆங்கில மருத்துவத்தில் ஓர் ஊசி போட்டு இருந்தால் பட்டுப் போய் உதிர்ந்துப் போயிருக்கும். இயற்கையாக குணமாகட்டும் என்று விட்டதன் விளைவு தாங்க முடியாத ரண வேதனையை வலியாகவும், எரிச்சலாகவும் அனுபவிக்க வேண்டிய நிலை.
            முக்கியமாக உணவுதான் இதன் பிரச்சனை. பயன்படுத்தும் எண்ணெயில் ஏதோ கோளாறு இருக்கிறது. எண்ணெய் பதார்த்தங்களை முடிந்த வரை விலக்குவது நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டும் என்பவர்கள் நல்ல தரமான எண்ணெயை (அது பெரும்பாலும் கிடைப்பதில்லை) வாங்கி வந்து நீங்களே பதார்த்தம் செய்து சாப்பிட வேண்டும்.
            நல்ல தரமான எண்ணெய் என்பது நீங்களே விளைவித்து நீங்களே ஆட்டிக் கொள்வது அல்லது உங்கள் கண்முன் விளைவித்து ஆட்டித் தருபவது.
            இதற்கெல்லாம் நேரம் இருக்குமா என்று தெரியாது. ஆனால் நோய்களை உருவாக்கிக் கொள்வதற்கும், அதற்கு வைத்தியம் பார்ப்பதற்கும் நிச்சயம் நேரம் இருக்கத்தான் செய்கிறது! 

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...