அந்த மூன்று விசயங்கள்
1) அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள்.
அரசியல் செய்வார்கள். அன்பு, கருணை, நம்பு, நம்பிக்கை என்பதும் அவர்களுக்கு அரசியல்தான்.
(அவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து விடக் கூடாது)
2) உன்னைப் புரிந்து கொள். பின் அடுத்த
அடியை எடுத்து வை. புரியாமல் குழம்பிக் கொண்டே இராதே. நிதானமாக அடிகளை எடுத்து வைத்து
நடந்து கொண்டே இரு. காலமும், தூரமும் கடக்கும் போது சூழ்நிலைகள் மாறுகின்றன. சூழ்நிலைகள்
மாறும் போது புரியாத விசயங்களும் புரியத் தொடங்கும்.
3) ஒருவருக்கு உதவி செய்வதாக நினைத்து
ஓவராக உளறாதே. அதன் மூலம் உன்னுடைய பலவீனங்களை நீயே அவருக்குக் காட்டி விடுகிறாய்.
அவைகளையே உனக்கு எதிரான ஆயுதங்களாக உன்னிடம் உதவிப் பெற்றவர்கள் பயன்படுத்தும் ஒரு
காலமும் வரும்.
மேற்காணும் மூன்று விசயங்களிலிருந்தும்
உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? புரிந்தால் நல்லது. புரியாவிட்டால் அதுவும் நல்லது. நீங்கள்
அப்பாவி. அப்படியே தொடருங்கள்.
*****
No comments:
Post a Comment