தேங் காட்!
"இன்னிக்கு வேலை இல்லாம போயிடுமோன்னு
பயந்துகிட்டு இருந்தேன். தேங்க்ஸ் பிள்ளையாரப்பா!" நன்றி சொல்லி விட்டு கண்ணீர்
அஞ்சலி போஸ்டரும், பசை வாளியுமாக சைக்கிளைக் கிளப்பினான் கன்னியப்பன்.
*****
கோஸ்ட்
"ஸ்டார்ட் கேமிரா!" நான்கு முறை
சொல்லியும் கேமிரா ஸ்டார்ட் ஆகாததால் வெலவெலத்து நின்றார் பேய்பட டைரக்டர் கோஸ்ட்.
கே. ராம்.
*****
பிற்பகல்
"ஷாப்பிங் போய்ட்டு வர முடியுதா?
இருபதாயிரம் ரூபா செல்லை அடிச்சிட்டானுங்க!" எரிச்சல் பட்டுக் கொண்டான் ஹேக்கர்
சங்கர்.
*****
No comments:
Post a Comment