நியாயமாரே!
"காசு கொடுத்து சாப்பிடுறதுக்குத்தானே
பரிமாறுறான். எதுக்கு டிப்ஸ் கொடுக்கணும்?" என்றார் எதற்கெடுத்தாலும் டேபிளுக்கு
அடியில் கை நீட்டும் கிளார்க் குமாரசாமி.
*****
ஆசி
"வருமானத்துக்கு அதிகமா கிரெடிட்
கார்டுகளை வாங்கிடாதடா!" ஸ்டேட்ஸ் செல்லும் மகனை ஆசீர்வதித்து அனுப்பினார் ஆரோக்கியசாமி.
*****
காப்பிஸ்
படம் காபி ரைட் பிரச்சனையால் நிற்பதைப்
பொருட்படுத்தாமல் காபி போட்டுக் கொண்டிருந்தான் திருட்டு டிவிடிக்காரன்.
*****
No comments:
Post a Comment