20 Aug 2017

ஒரு பெர்பெக்சனிஸ்ட் உருவாகிறான்!

ஒரு பெர்பெக்சனிஸ்ட் உருவாகிறான்!
            எஸ்.கே. தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்த்து விட்டான். அவன் அகரத்தில் தொடங்கி, ரகத்தில் தொடர்ந்து, 'சு'வில் முடியும் பள்ளியில் பணியாற்றுகிறான்.
            இனி அவனுக்குக் கவலையில்லை. மாதா மாதம் சம்பளம் வந்து விடும். அவன் பிள்ளை தனியார் பள்ளியில் நன்றாகப் படிப்பான். அவன் இஷ்டத்திற்குப் பணிக்குப் போவான், வருவான். அவனை யார் கேள்வி கேட்க முடியும்?
            அவன் பாடம் நடத்தாமலே, "ஏன் படிக்கவில்லை?" என்று பிள்ளைகளைக் கேள்வி கேட்பான்.
            பணிக்கு வராமலே வந்தது போல கையெழுத்துப் போடச் சொல்வான். அவன் செய்வதைத் தவறு என்று யார் சொல்ல முடியும்? அப்படிச் செய்யாதே என்று யார் கட்டுபடுத்த முடியும்?
            எல்லாரும் வேடிக்கைத்தான் பார்ப்பார்கள். அவன் இல்லாத நேரம் பார்த்து அக்கிரமம் செய்கிறான் என்று குசுகுசுத்து விட்டுப் போய் விடுவார்கள்.
            எஸ்.கே. எப்படிப்பட்டவன் தெரியுமா? டிசம்பரோடு விடுப்பு முடிந்து விடும் என்பதற்காக விடுப்பு தேவையில்லாத நிலையிலும் இருக்கின்ற விடுப்பைப் போட்டுத் துய்ப்பான். சரியாக பனிரெண்டு நாள்களுக்கு விடுப்பு எடுத்த திருப்தி வரா விட்டால் ரொம்ப மனசு கஷ்டப்படுவான்.
            வரையறுக்கப்பட்ட விடுப்பாக வரும் மூன்று நாளையும் துய்த்தாக வேண்டும் அவனுக்கு. இன்ன பிற சிறப்பு விடுப்புகள் வந்தால் அதைப் போட்டுத் துய்க்கா விட்டால் உய்ய மாட்டான்.
            விடுப்புகளின் நாயகன் அவன். எடுத்த விடுப்பிற்கு மறுநாள் போய் கையெழுத்துப் போட்டு சுரண்டிய விடுப்புகள் கணக்கில் அடங்கா. எஸ்.கே.வைப் பற்றி யாரிடமாவது கேட்டால் பெர்பெக்சனிஸ்ட் என்று சொல்லாதவர்கள் குறைவு.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...