20 Aug 2017

சூடாக ஒரு கோபமடக்கிப் பார்சேல்!

சூடாக ஒரு கோபமடக்கிப் பார்சேல்!
            கோபத்தைப் பற்றி நிறைய ஆராய்ந்தாகி விட்டது. இன்னும் அது ஆராயப்பட வேண்டிய தலைப்பே. காரணம் கோபம் எக்காலத்திலும் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வருகிறது. அதுவும் நிறையவே வருகிறது.
            எதிர்பார்ப்பது நடக்கவில்லை எனும் போது கோபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. சக்திக்கு மீறி நிறைய செய்ய நினைத்து, எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நடக்க முடியாத நிலையில் ஏற்படும் கோபமும் தவிர்க்க முடியாதது.
            தன்னைத் தானே மிகவும் கட்டுப்படுத்திக் கொள்ளும் போது ஏற்படும் மனஇறுக்கத்தின் காரணமாகவும் கோபம் ஏற்படும்.
            மனம் இயல்பாக இருக்க வேண்டும். சுதந்திரமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டாலும் கோபம்தான் ஏற்படும்.
            தயவு செய்து நினைப்பதெல்லாம் சரியென்று நினைக்க வேண்டாம். இப்போது சரியென்று நினைப்பது வேறு ஒரு நிலைமையில் தவறாகவும் தோன்றலாம்.
            கோபம் இப்படித்தான் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. அதற்கான வாசல் என்பது ஆயிரங் கோடி வாயில்.
            சிலர் போட்டு படாத பாடு படுத்துவார்கள். கேள்விளைக் கேட்டே கொல்லுவார்கள். தாங்க முடியாத எரிச்சலுக்கு ஆளாக்கி விடுவார்கள். அளவுக்கு மீறி கோபத்தைக் கட்டுபடுத்திக் கொள்ள நேரிடும். அது வேறு விதமாகவும் பிரதிபலித்து விடும்.
            கோபத்தை ஒழித்து கட்ட வழியில்லையா? வழியே இல்லையா?
            ஏன் இல்லை?
            எண்ணங்களை ஒழித்துக் கட்டுங்கள். திறந்த மனதோடு அணுகுங்கள். அப்போது கோபம் வராதா? ஆம்! சிரிப்புதான் வரும். இரண்டு எண்ணங்கள் உரசிக் கொள்ளாத இடத்தில் எதுவும் தீப்பற்றி எரிவதில்லை.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...