போக்கிரித்தனத்தைப் பொடிமாஸ் செய்ய...
"மனிதர்கள் தங்கள் மனம் போன போக்கில்
இருக்கவும், செயல்படவும் விரும்புவார்கள். அவர்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
நிர்ப்பந்திப்பது சாத்தியமற்ற ஒன்று.
சமூகத்தின் சில பொதுவான விசயங்களில் ஒரு
நெறிமுறைக்குட்பட்டு இருப்பது அவசியம். அதைக் கூட அவர்கள் செய்ய மாட்டேன் எனப் பிடிவாதமாக
இருக்கும் போது யாரோ ஒருவரின் கோபத்திற்கு ஆட்பட்டு விடுவார். (அப்போது கோபம்
அடைவது அதிநிச்சயமாக நீங்கள்(ர்)தான்)
பொதுவான விசயங்களில் ஒரு நெறிமுறைக்குட்பட்டு
இல்லாமையை ஒருவரின் தனி உரிமை என்று நினைத்துச் சாந்தப்படுத்திக் கொள்வது தவறில்லை.
இதைத் தவிர்க்க வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. கோபம் உங்களை மற்றுமொரு போக்கிரித்தனத்திற்கு
அழைத்துச் சென்று விடும்.
அவர்களைப் பகைத்துக் கொள்ள முடியாது.
அவர்களைப் பகைத்துக் கொள்வது முக்கியப் புள்ளிகளையும், முக்கிய இயக்க கேந்திரங்களையும்
பகைத்துக் கொள்கிற ஒரு நிலையை உருவாக்கி விடுகிறது.
நீங்கள் கோமாளி போல நடந்து கொள்ள வேண்டிய
இடம் அது. மற்றும் நீங்கள் அதிபுத்திசாலியாக நடந்து கொள்ள வேண்டிய இடமும் வரும். அது
போக்கிரித்தனம் பலவீனம் அடையும் இடம். நீங்கள் அப்போது கண்டம் செய்து இருப்பீர்கள்.
தயவுசெய்து காத்திருங்கள்."
- ஒரு ரெளடியிடம்
அடி வாங்கிய இரவில் மற்றவர்களுக்குப் புத்தி சொல்லி அமைதிபடுத்துவது போல எஸ்.கே.
தனக்குத்(தங்களுக்கு) தானே எழுதிக் கொண்டு ஆறுதலடைந்த பத்திதான் மேலே உள்ளது.
*****
No comments:
Post a Comment