19 Aug 2017

வர்றான் பாரு கருப்பு!

வர்றான் பாரு கருப்பு!
அப்பா லஞ்சமாய் வாங்கிய
அஞ்சு லட்சத்தைக் கொடுத்து
அண்ணனுக்கு என்ஜினியர் சீட் வாங்கினோம்.
அவன் படித்து வேலைக்குப் போய்
கையாடல் செய்து கொடுத்து
ஐம்பது லட்சத்தைக் கொடுத்து
தம்பிக்கு மெடிக்கல் சீட் வாங்கினோம்.
தம்பி டாக்டராகி
மாத்திரைகள் எழுதிக் கொடுத்து
‍டெஸ்டுகளுக்கு எழுதிக் கொடுத்து
சம்பாதித்த கோடிகளில்
மாளிகை கட்டிக் கொண்டோம்
ப்ளாட்டுகள் வாங்கிப் போட்டோம்
தங்க நகைகளை வாங்கிக் குவித்தோம்
நம்புவீர்களோ
நம்ப மாட்டீர்களோ
எங்கள் பணப் பரிமாற்றம் அனைத்தும்
மின்னணுப் பரிமாற்றம்தான்.
சந்தேகம் இருப்பின்
எங்கள் வெப் தளத்தை
லாக் ஆன் செய்து பாருங்கள்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...