வாசிப்பின் வழிமுறைகள்
எஸ்.கே. படிப்பதற்கென சில வழிமுறைகள் வைத்து
இருக்கிறான். தெரிந்தால் உங்களுக்கும் பயன்படும்.
மீண்டும் மீண்டும் படிப்பதுதான் மனதில்
பதியும் என்பதால் அவன் ஒரு புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படிப்பான். முதல் முறையில்
படிக்கும் போதே மனதில் பதிந்து விட வேண்டும் என்று நினைக்க மாட்டான்.
பல முறைகள் படிப்பான். படித்தது எல்லாம்
மனதில் பதிய வேண்டும் என்று அவசரம் காட்ட மாட்டான். அவசரம் மனஇறுக்கத்தை ஏற்படுத்தும்
என்பதை அனுபவத்தின் மூலம் அவன் நன்கு புரிந்து கொண்டு இருக்கிறான்.
படித்ததைக் குறிப்புகள் எடுப்பான். அவன்
குறிப்புகள் மிக எளிமையாக இருக்கும். அதை அசாதாரணமாகவோ, பிரமாண்டமாகவோ அவன் அமைத்துக்
கொண்டதில்லை.
உணர்ச்சிவசப்படுவதோ, கவனத்தை ஈர்க்க வேண்டும்
என்று முயற்சி செய்வதோ அவனது வாசிப்பில் கிடையாது.
எளிமையில் இருக்கும் அழகும், கவர்ச்சியும்
போதும் என்பான். இதனால் அவன் எங்கும் படிக்கிறான். இரைச்சலாக இருக்கும் சந்தைக் கடையில்
தொடங்கி, அமைதியாக இருக்கும் ஆலமரத்தடி வரை பல இடங்களில் அவன் படித்து இருக்கிறான்.
படிப்பதற்கான விசேசமான மனநிலைகளோ, சூழ்நிலைகளோ
அவனுக்கு தேவைபட்டதில்லை. படிப்பின் முதிர்ந்த நிலை அது. அந்த இடத்தை நோக்கி நீங்களும்
நகர வேண்டும்.
எதையும் எளிமையாகப் பார்க்கும் மனநிலை
அதற்குத் தேவைப்படுகிறது. அது எளிமையாக எதையும் எடுத்துக் கொள்ளும் மனநிலை ஆகும்.
*****
No comments:
Post a Comment