நம் கடன் குழந்தை பெறுவது மட்டுமே!
நாம் கொண்டாடாது
போனாலும்
ஆண்ட்ராய்டுகள்
கொஞ்சும்
குழந்தைகளை!
அக்கம் பக்கத்தில்
விளையாடாதே
என்று சொன்னாலும்
மொபைலோடு
விளையாடிக் கொள்ளும்.
பூட்டி வைத்த
வீட்டுக்குள்
மொபைல் துணையோடு
நாள் முழுதும்
இருந்து கொள்ளும்.
நாம் ஆப்ஸ்களைக்
கையாள
தெரிந்து கொண்டால்
குழந்தைகள்
தானாக வளர்ந்து கொள்ளும்!
*****
No comments:
Post a Comment