11 Aug 2017

தலைகீழ் மாற்றம்

தலைகீழ் மாற்றம்
            உழைப்பிற்குப் பிறகு களைப்பு என்பது போல, சிந்தனைக்குப் பிறகு சலிப்பு என்பது ஏற்படத்தான் செய்யும் என்று எஸ்.கே. நினைத்தான். ஓய்வுதான் அதற்கு மருந்து என்பது அவனது எண்ணமாக இருந்தது.
            இனி நாவல்கள் எழுத வேண்டாம் என முடிவு செய்தான். அந்தக் கவனத்தை ஜோக்குகள் எழுதுவதில் செலுத்துவது எனத் தீர்மானித்தான். இனி கவிதைகள் எழுத வேண்டாம் என்று முடிவு செய்தவன், ஒரு வரித் துணுக்குகள் எழுதுவது எனத் தீர்மானித்தான்.
            ஒன்றை விட்டால்தான் இன்னொன்றைத் தொடர முடியும். அந்த அடிப்படையில் கவிதைகள் எழுதுவதையும் விட்டு விட்டு குறுக்கு எழுத்துப் போட்டிகளில் கலந்து கொள்வது என முடிவு செய்தான்.
            "எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் எதையும் செய்தவன் ஆக மாட்டான். கருத்துகள் கத்தியை விட வலிமையானது. உன் கருத்துகளுக்காக உலகமே திரும்பிப் பார்க்கும் நாளும் உருவாகும்" என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட எஸ்.கே.  அதுவரை காத்திருப்பது என முடிவு செய்தான்.
            இப்போது எஸ்.கே. ஜோக்குகள், ஒரு வரித் துணுக்குகள், குறுக்கெழுத்துப் போட்டிகள் மூலம் கணிசமான கவனம் பெற்ற எழுத்தாளனாக இருக்கிறான்.

*****

No comments:

Post a Comment