21 Aug 2017

அப்பா பார்த்த கல்யாணம்

அப்பா பார்த்த கல்யாணம்
ஒரே இரவில்
அத்தனைப் பணங்களும்
செல்லாததாகி விட்டன!
ஒவ்வொரு பகலாய்
ஒவ்வொரு இரவாய்
அப்பா உழைத்து உழைத்து
எண்ணி எண்ணிச் சேர்த்தது!
எப்படியோ எளிமையாக
மகளின் கல்யாணத்தை
முடித்து விட்டு
வாய் பிளக்க டி.வி.யில்
பிரமாண்டமாய் நடந்த
ரெட்டியின் கல்யாணத்தைப்
பார்த்துக் கொண்டு இருந்தார் அப்பா
ஆசுவாசமாக!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...