எஸ்.கே. என்ற படைப்பாளனின் வாக்குமூலம்
எதிலும் என் படைப்புகள் வர வேண்டும் என்று
நான் எழுதவில்லை. படைப்புகளைப் படைக்க முடிகிறதே என்ற வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காகத்தான்
எழுதுகிறேன். மேலும் எனக்கு எழுதுவது பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன்.
இப்போதைய எழுத்தைப் பொருத்த வரையில்
நான் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதை மூன்றாகப் பகுத்துக் கூறலாம்.
1. மீட்டுருவாக்கம் (புரியாதவர்கள் இலக்கியக்
கொள்கை குறித்த நூல்களைப் படித்துக் குழப்பிக் கொள்ளுங்கள்)
2. ஒவ்வொன்றிற்கும் ஒரு பார்வை (இது இனிமேல்தான்
இலக்கியக் கொள்கையாகப் பிரபல்யம் ஆக வேண்டும்)
3. மனிதர்களுக்குக் கருத்துகள் தேவை என்பதால்
அதைத் தருவது (இதை நான் புரிந்து கொள்ளவே சில நாள்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்)
இதை சாமியார் பாணியில் கொடுத்தால் அது
தனிக்கவர்ச்சியைத் தரும்.
பெரும்பாலும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின்
ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். அதை கோகோ கோலா, பெப்சி குளிர்பானக் கலவைகளைப்
போல் ரகசியமாக வைத்திருப்பார்கள். நான் அப்படியல்ல. அவிழ்த்துக் காட்டி விட்டேன்.
இனிமேலாவது அரைகுறை எழுத்துகளின் மீதான் கவர்ச்சி நின்றால் சரி!
*****
No comments:
Post a Comment