டிவிஸ்ட்
கரண்ட் கட் ஆனதும் பாட்டிக்கு சோட்டா
பீம் கதை சொல்லிக் கொண்டிருந்தான் பேரன்.
*****
இது புதுசு!
தன் வீட்டிலிருந்த பழைய பொருட்களையெல்லாம்
விற்ற தண்டபாணிக்கு, சிதம்பரம் கொடுத்தது புதிய கரன்சி நோட்டுகள்.
*****
பிசினஸ் மாடல்
"பிசினஸ் நல்லா போகும்னு நினைக்கிறேன்.
அதான் நர்சரி ஸ்கூல் ஆரம்பிச்ச கையோட முதியோர் இல்லத்தையும் பக்கத்துலயே ஆரம்பிச்சிட்டேன்!"
என்றார் நமச்சிவாயம்.
*****
No comments:
Post a Comment