மெளனச் சொற்களின் அர்த்தங்கள்
ஒரு சிலரிடம் பேசப் பேச ஏன் பேசுகிறோம்
என்று தோன்றாமல் இருக்காது. அப்படிப் போட்டு குழப்புவார்கள்.
வார்த்தைகளில் குழப்பிக் கொள்ள ஏதுமில்லை.
சிக்கலான மனதுக்கு அதுதான் தேவைப்படுகிறது. பேச்சாளர்களை நாம் விரும்புகிறோம். பேச்சாளர்களை
நாம் நேசிக்கிறோம்.
யாரும் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள்.
அவர்கள் மனதிற்குப் பிடித்தாற் போல பேசினால் மட்டுமே கேட்பார்கள்.
உங்கள் பேச்சைக் விரும்பிக் கேட்கிறார்கள்
என்பதற்காக அவர்களுக்குப் பிடிக்காததைப் பேசினால், உங்களைப் பிடித்த அதே வேகத்தில்
வெறுக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.
நாம் வார்த்தைகளில் பேசுவதே இல்லை. மனநிலைகளில்தான்
பேசுகிறோம். வார்த்தைகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன.
வார்த்தைகளில் பேச மனநிலைகள் உதிர்ந்துப்
போக வேண்டும். வார்த்தைகளின் உண்மையான ஆழத்திற்குள் நீங்கள் சென்றிருக்க வேண்டும்.
முடியுமானால் முயற்சித்துப் பாருங்கள்.
முடியாவிட்டால் மெளனமாக இருந்து பாருங்கள்.
வார்த்தைகளின் ஆழங்களுக்குள் உங்களைய அறியாமல் சென்று கொண்டிருப்பீர்கள். ஒரு கட்டத்தில்
அந்த வார்த்தைகளும் உதிரத் தொடங்கும்.
துளிரப்பது உதிரத்தானே வேண்டும். எத்தனை
காலம் ஒட்டிக் கொண்டிருக்கும்?
*****
No comments:
Post a Comment