விவசாய துர்மரணங்கள்
விவசாயிகள்
மரணம்
தலைவர்களுக்கு
அதிர்ச்சி தரலாம்.
தொண்டர்களாய்
தீக்குளிப்புக்கோ
பட்டினிப்
போராட்டத்துக்கோ
பயன்படுத்தப்பட
வேண்டியவர்கள்
இப்படி அநியாயமாய்
இறந்து விட்டதாக
தலைவர்கள்
வருத்தப்படலாம்.
ஒருவேளை
இனி விவசாய
நிலங்களை
எளிதாக ப்ளாட்
போடலாம்
என்று நினைத்து
சந்தோசமும் படலாம்.
விவசாய மரணங்களை
விவசாய நிவாரணங்களாக்கி
ஒரு ஒதுக்கு
ஒதுக்கி விடலாம்
என்றும் கணக்குப்
போடலாம்.
மன்னர் காலம்
தொட்டு
தலைவர் காலம்
வரை
விவசாய மரணங்கள்
மர்ம மரணங்களாகவே
பூமியில் புதையுண்டு
கிடக்க,
தங்கள் துர்மரணம்
தவிர்க்க முடியாது
என்பது தெரிந்தும்
விவசாயிகள்
விவசாயம்
செய்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
தலைவர்கள்
ஆறுதல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment