மாவுக்கைத் தீர்வு
சரியான மண்டை காய்ச்சலாக இருந்தது எஸ்.கே.வுக்கு.
மனச்சோர்வின் வெளிப்பாடுதான் இது என அவன் புரிந்து கொண்டான்.
எந்நேரமும் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும்
விளையாடிக் கொண்டிருப்பதைப் பற்றியே அவன் மனம் சிந்திக்கிறது. நிறைய பேர் பார்க்க
வேண்டும் என்று விரும்புகிறது. பத்திரிகைகள் எல்லாம் பதிவுகளை எடுத்துப் போட வேண்டும்
என்று விரும்புகிறது.
எதார்த்தம்... பத்து பதினைந்து பேர் அவன்
பதிவுகளைப் பார்த்தால் அதிகம். பத்திரிகைகளில் ஏதோ படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
அவ்வளவுதான் சாத்தியமாக இருக்கிறது.
ஆனால்... எஸ்.கே.வின் எதிர்பார்ப்பு அதிகமாக
இருக்கிறது. அதுதான் பிரச்சனையாக உருவெடுக்கிறது. எதிர்பார்க்கும் அளவுக்கு இலக்கை
அடைய முடியவில்லையே என்று ஏமாற்றம் விரக்தியாக வெளிப்படுகிறது. மனச்சோர்வாக மாற்றம்
பெறுகிறது.
இதற்கு தீர்வு ஓய்வுதான். சில நாள்கள்
பகல் - இரவு தெரியாமல் தூங்கி வழிந்தான் எஸ்.கே. மாற்று வேலை மனதை மாற்றும் நம்பினான்.
போண்டா சுடும் வேலைக்குச் சில நாட்கள் சென்றான். கொஞ்ச நாட்கள் இதைத் தொடர்ந்து
விட்டு பிறகு சமோசா போடும் வேலைக்கு மாறினால் ஒரு தீர்வு கிடைக்கும் நம்பிக்கையோடு
இருக்கிறான்.
கையில் எப்போதும் போண்டா மாவோடு இருப்பதால்...
மாவுக் கையோடு டச் மொபைலைத் தொட முடியாத நிலையில்... மனநிலையில் அநேக மாற்றங்களை
அடைந்து இருக்கிறான் எஸ்.கே.
*****
No comments:
Post a Comment