டூ இன் ஒன்
"ஒன் டைம் பட்ஜெட்! ரெண்டு பார்ட்
எடுத்திடலாம்!" என்றதும் சம்மதிப்பதென முடிவெடுத்தார் தயாரிப்பாளர்.
*****
தொடர்பு
வரி ஏய்ப்புச் சோதனைகள் பற்றிய செய்திகளுக்குக்
கீழே இருந்த கண்ணீர் அஞ்சலி செய்தி எதேச்சையானதா என்று யோசித்துக் கொண்டிருந்தார்
கண்ணபிரான்.
*****
கிளியரன்ஸ்
"ஒரு குவார்ட்டர் போட்டாத்தான் சார்
பாடியைக் கிளியர் பண்ண முடியும்!" என்றனர் டிரங்க் அன்ட் டிரைவில் ஆக்சிடென்ட்
ஆகி நசுங்கிக் கிடந்த உடல்களைப் பார்த்த பாண்டியும், பக்கிரியும்.
*****
No comments:
Post a Comment