22 Aug 2017

காத்திருப்பவர்களே கண்டடையுங்கள்!

காத்திருப்பவர்களே கண்டடையுங்கள்!
            காத்திருப்பதை மனித மனம் விரும்புவதில்லை. விரும்புகிறீர்களோ இல்லையோ காத்திருப்பிற்கான பலன்தான் வாழ்க்கை.
            வாழ்க்கையில் பல நேரங்களில் தேவையில்லாமல் காத்திருக்க நேர்கிறது. சில நேரங்களில் பயனற்ற விசயங்களை விவாதிக்க‍ வேண்டியிருக்கிறது. மற்றும் சில நேரங்களில் உப்புச் சப்பில்லாத காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதை எப்படி உபயோகமாக மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதில்தான் நீங்கள் பிரகாசம் அடைகிறீர்கள்.
            பயனற்ற காத்திருப்பு நேரத்தில், பயனுள்ள காரியம் ஒன்றை நீங்கள் செய்வதை யார் தடுக்கப் போகிறார்கள்? அங்குதான் நீங்கள் தனித்துவம் பெறுகிறீர்கள். உங்களுக்கான தனித்த அடையாளம் உருப்பெறுகிறது.
            இந்த உலகில் பொறுமையிற் சிறந்த தவமில்லை. காலமும் பொறுமையும் மிகச் சிறந்த படைவீரர்கள். எதிலும் அவசரம் காட்டாதீர்கள். அப்படிச் செய்ய வேண்டுமோ, இப்படிச் செய்ய வேண்டுமோ என்று பதற்றப்பட்டுப் பாய்ச்சல் காட்டாதீர்கள். எதையாவது செய்தால் எதாவது நடக்கும் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
            பொறுமையாக எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்யுங்கள். பழம் பழுத்து உங்கள் மடியில் வந்து விழுவது நிச்சயம். கற்களை வீசித்தான் பழங்களை வீழ்த்த வேண்டும் என்ற அவசியமில்லை. எந்தப் பழம் எந்த நேரத்தில் உதிரும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு செயல்படுவது உத்தமமான இயற்கை அறிவு.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...