ஆலோசனை
"ரூல்ஸை பிரேக் பண்ணி எட்டு மாடி
கட்டுனா தீ விபத்து ஏற்படாம இருக்குமா?" ஜோதிடரைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்
தொழிலதிபர் ஏகாம்பரம்.
*****
அப்புறம்...
"பையனுக்கு ஒரு நல்ல வீடு கட்டிட்டா
போதும்!" என்ற ஆறுமுகத்திடம், "அப்புறம்?" என்று கேட்ட இராஜரத்தினத்துக்குப்
பதில் சொன்னார் ஆறுமுகம், "நல்ல முதியோர் இல்லமா பார்த்து சேர்ந்துடுவேன்!"
*****
பரிசு
பிறந்த நாள் பரிசாக தன்னையே கொடுத்த அமலாவை அதற்குப் பின் சந்திக்கவில்லை
சந்தோஷ்.
*****
No comments:
Post a Comment