3 Jul 2017

என்று மட்டும் சொல்வதற்கில்லை


என்று மட்டும் சொல்வதற்கில்லை
தினம் தோறும்
இரண்டு வேளை பல் துலக்குபவன்
அநேகமாக அண்மையில்
பல் மருத்துவரிடம்
சென்று வந்தவனாக இருப்பான்
அடிக்கடி பஞ்ச் டயலாக் பேசித் திரிபவன்
டோரன்டில் பதிவிறக்கம் செய்து
படம் பார்த்தவனாக இருப்பான்
மணல் கொள்ளை பற்றியும்
கிரானைட் பற்றியும் பேசுபவன்
வாட்ஸ் அப்பிலோ, பேஸ்புக்கிலோ
அதை படித்தவனாக இருப்பான்
அடிக்கடி செல்பி எடுத்துக் கொள்பவன்
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவனாக இருப்பான்
வித்தியாசமாக ஹெல்மெட் அணிந்து செல்பவன்
செயின் பறிப்பவனாக இருப்பான்
அப்படி இல்லாமைக்கான சாத்தியக்கூறுகள் பற்றி
சிந்திப்பவன் அநேகமாக அமைதியாக
ஒதுங்கி நடந்து கொண்டிருப்பான்
என்று மட்டும் சொல்வதற்கில்லை
அநேகமாக ஆர்ப்பாட்டமும் செய்து கொண்டிருப்பான்
*****

No comments:

Post a Comment

மட்டையான மட்டைப் பந்து!

மட்டையான மட்டைப் பந்து! நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரிந்த அளவுக்கு ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது அல்லது ஐந்து நாள் போட...