தமிழ் இலக்கியப் பரப்பில் எஸ்.கே. கவனிக்கப்படுகிறான்!
தமிழ் எழுத்தாளன் எஸ்.கே. ஆகிய என்னை நூல்
விமர்சனங்கள் எழுதச் சொல்லி நிறைய வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
தமிழ் அகராதி (கழகப் பதிப்பு), ஆங்கில
அகராதி (லிப்கோ வெளியீடு) ஆகிய இருபெரும் புத்தகங்களையும் படித்தவன் என்ற முறையில்
அவர்களின் வேண்டுகோள்களை நான் நிராகரிக்க முடியாததாகிறது. மேலும் பேருந்துப் பயணத்தின்
போது வாங்கிய சித்த மருத்துவக் குறிப்புகள் ஆயிரம், பொது அறிவு ஆயிரம் ஆகிய இரு நூல்களையும்
வாசித்த அனுபவமும் உண்டு. அவ்வபோது பேப்பர் மடித்து வரும் பொருள்களில் இருக்கும்
பழைய பேப்பர்களையும் விடாமல் படித்து விடுவதுண்டு.
அன்பர் ஒருவர் வெளியிட்ட பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்
என்று நூலை அவர் இலவசமாகக் கொடுத்ததால் அதைப் படிக்கும் பாக்கியமும் அடியேனுக்குக்
கிடைத்திருக்கிறது.
இந்த அனுபவங்கள் போதும் என்று நினைக்கிறேன்.
விமர்சனம் வேண்டுபவர்கள் நூல் பிரதி ஒன்று மட்டும் அனுப்பி வைத்தால் கூட போதும். படித்து
விமர்சனம் எழுதி விட்டு திருப்பி அனுப்பிடவும் தயாராக இருக்கிறேன். இதற்காக நூலாசிரியர்களிடமிருந்து
பைசா காசு பெறக் கூடாது என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன். கொடுக்க மாட்டார்கள்
என்பது வேறு விசயம்.
(எஸ்.கே.
இன்னும் வருவான்...)
*****
No comments:
Post a Comment