3 Jul 2017

ஒரு துளி உண்மை


ஒரு துளி உண்மை
ஓரு குவார்ட்டருக்கு பத்து ரூபாய் குறைவதாக
ஒரு போதைப்பாக்குக்கு இரண்டு ரூபாய் குறைவதாக
ஒரு சிகரெட்டுக்கு ஒரு ரூபாய் குறைவதாக
கேட்பவர்களுக்கு ஈயாமல் செல்வது
பெருமையாகத்தான் இருக்கிறது
அவர்களை நாலு வார்த்தை திட்டி விடுவதில்
சுகம் இருக்கத்தான் செய்கிறது
வேறு காரணங்களைச் சொல்லி
காசு கேட்காத அவர்களின் நேர்மை
ஒரு கட்டத்தில் உறுத்தத்தான் செய்கிறது
அவர்கள் ஏன் உண்மையானவர்களாக
இருக்கிறார்கள் என்று?
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...