வேகம்
மெதுவாகச் சென்று கொண்டிருந்த அமரர் ஊர்தியில்,
வேகமாகச் சென்று இறந்தவரின் உடல் இருந்தது.
*****
கண்டிப்பு
"பசங்க செல்போன் கொண்டு வரக் கூடாது.
அவங்களோட ஹோம் ஒர்க் டீடெய்ல்ஸைப் பேரண்ட்ஸோட வாட்ஸ் அப் நம்பர்க்கு அனுப்பிடுவோம்!"
கண்டிப்பாகச் சொன்னார் பள்ளியின் தாளாளர்.
*****
உடனடி தீர்ப்பு
"கோர்ட் ஆர்டர் வர்றதுக்குள்ள அதுவா
எரிஞ்சி, அதுவா இடிஞ்சு விழுந்துடுச்சே!" என்று ஆதங்கப்பட்டார் இடிந்து விழுந்த
பத்து மாடிக் கட்டிடத்தின் முன் நின்ற பொது நல சேவகர் கந்தசாமி.
*****
No comments:
Post a Comment