3 Jul 2017

உங்கள் வீட்டு இயந்திரத்துக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது


உங்கள் வீட்டு இயந்திரத்துக்கு
சர்க்கரை வியாதி இருக்கிறது
நடைபயிற்சி செய்பவர்க்கு சர்க்கரை இருக்கலாம்
மிதிவண்டியில் பயிற்சி செய்பவர்க்கு
இரத்த அழுத்தம் இருக்கலாம்
கைகளை வீசி மெல்ல ஓடுபவர்க்கு
கொழுப்போ, உடல்பருமனோ இருக்கலாம்
இந்தச் சிறுபொழுதில் சுயமாக இயங்கும்
இவர்கள் இன்னும் சிறிது நேரத்தில்
இயந்திரம் போல் இயங்கத் தொடங்கி விடுவார்கள்
ஓர் இயந்திரத்தின் இயக்கம்
சர்க்கரையை, இரத்த அழுத்தத்தை, கொழுப்பை,
உடல்பருமனைக் கொண்டு வருமா என்று
நீங்கள் ஆச்சர்யப்படலாம்
அவர்கள் மனிதர்களாக மாறி
அவைகளைக் குறைப்பதற்கான
அதற்கான பயிற்சியை அவர்கள் செய்கிறார்கள்
என்பதை புரிந்து கொள்ளாத வரை
*****

No comments:

Post a Comment

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்! இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள் ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம் அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கண...