4 Jul 2017

அப்பா அமைதியானவர்


அப்பா அமைதியானவர்
அப்பா குடித்த இரவு
அம்மாவை அடித்து
அக்காவை அடித்து
தங்கையை அடித்து
என்னை அடித்து
வன்முறையில் முடிகிறது
மற்றபடி பகல் முழுவதும்
அமைதியாகத்தான் இருக்கிறார்
அப்பா
*****

No comments:

Post a Comment