கவனித்துத் திட்டுதல்
ஆட்டோ கட்டணம் கூடுதலாகக் கேட்ட ஆட்டோக்காரரைத்
திட்டிய சித்தப்பா கூடுதல் விலை வைத்து கூல்ட்ரிங்ஸ் விற்பதாக திட்டியவர்களை கூலாக
கவனித்து அனுப்பி விட்டு, அவர்கள் போன பின் திட்டித் தீர்த்தார்.
*****
வித்தியாசம்
"தேசிய நெடுங்சாலைக்கும், மாநில நெடுஞ்சாலைக்கும்
என்ன வித்தியாசம்?" கேள்வி கேட்ட ரத்னாவுக்கு, ராதிகா சொன்னாள், "டாஸ்மாக்தான்
வித்தியாசம்!"
*****
மடிப்பிச்சை
தன் மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்று
மாலா மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு மடிப்பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்,
அவள் புருஷன் பாண்டி டாஸ்மாக்கில் மூச்சு முட்டக் குடித்து விட்டு குப்புறக் கிடந்தான்.
*****
No comments:
Post a Comment