7 Jul 2017

மாளிகையின் டாய்லெட்


மாளிகையின் டாய்லெட்
பத்து கோடிக்கு
வீடிருப்பவன் மாளிகைக்குப்
பக்கத்தில்தான்
டாய்லெட் கூட இல்லாத
ஏழையின் குடிசை இருக்கிறது.
மாளிகையின் டாய்லெட் போல
இல்லாவிட்டாலும் கூட
ஒழுகாத ஒரு கூரை
செய்து கொடுக்க மனமிருப்பதில்லை
மாளிகைக்கு.
இரவெல்லாம் ஒளிரும் மாளிகை
இருண்டு நீர் சொட்டிக் கொண்டிருக்கும்
குடிசையை
நகைத்துப் பார்ப்பது போலவே இருக்கிறது
இரண்டு பேர் இருக்கும் தனக்கு
இருநூறு பேர் இருப்பதற்கான
சகல வசதிகளையும் செய்து கொண்டு.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...