7 Jul 2017

வாழ்க்கை ஒரு வால்நட்சத்திரம்


வாழ்க்கை ஒரு வால்நட்சத்திரம்
ஆகாசத்தில் பறக்க சிறகுகள்
இருந்தால்
நான் ஏன் தரையிறங்கப் போகிறேன்
பூமியில் ஊன்ற கால்கள்
இருந்தால்
நான் ஏன் தடுமாறப் போகிறேன்
நான் இரண்டும் இல்லாமல்
தூசி போல் அடித்துச் செல்லப்பட்டுக்
கொண்டிருக்கிறேன் காற்றுச் சுழலில்.
மாதச் சம்பளம் கடன்காரர்கள்
உறிஞ்சியது போக
எஞ்சியது இ.எம்..க்களால்
உறிஞ்சப்படும் போது
அந்த மாதத்தைச் சமாளிப்பதற்கென
ஒரு லோன் போட்டு
அதை மறுமாதத்திற்கான
.எம்.. ஆக மாற்றி
மாற்றி மாற்றி மறுபடியும்
காற்றுச் சூழலில் மறுதூசியாவதன் மூலம்
சொல்லப்படுவதற்கு ஒன்றுண்டு
ஒரு வால் நட்சத்திரம் போன்றது வாழ்க்கை
*****

No comments:

Post a Comment