காதல் மியூசியம்
காதல் தோல்வியை
எப்படிச் சொல்வதென்று
யோசித்தவன்
கவிதை எழுதினான்
தாடி வளர்த்துப்
பார்த்தான்
மது அருந்திப்
பார்த்தான்
தனக்கு மனைவியாக
வந்தவளிடமும்
பகிர்ந்து
கொண்டான்
மனதில் ஒரு
வடுவாக
நீடித்த
அதை
ஆற்றிக்
கொள்ள முடியாமல்
தன் மகளுக்கு
அவளின் பெயரையும்
சூட்டிப்
பார்த்தான்
அவள் நினைவுகளைக்
கொண்ட
மியூசியம்
போல் நடமாடிய அவனை
காப்பாற்றுவது
போல்
அவள் பெயர்
சூட்டிய
அவனின் செல்ல
மகள்
காதலித்து
ஓடிப் போனாள்!
*****
No comments:
Post a Comment